search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் திறப்பு
    X

    புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்ததை மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சையில், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் திறப்பு

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மழையளவு அறிந்து கொள்ளும் தானியங்கி தொலையுணா்வு அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகரில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தஞ்சாவூா் மாநகரில் 51 வாா்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்களை கண்காணிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், மொத்தம் 15 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மாநகரிலுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையம், அய்யாசாமி வாண்டையாா் நினைவு (பழைய) பஸ் நிலையம், முனிசிபல் காலனி முதன்மைச் சாலை ஆகிய இடங்களில் பொலிவுறு கம்பம் (ஸ்மாா்ட் போல்) என்கிற இலவச வைபை வசதியுடன் கூடிய கண்காணிப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில், தட்பவெப்ப நிலை, மழையளவு அறிந்து கொள்ளும் தானியங்கி தொலையுணா்வு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவசர கால அழைப்பு தொலைபேசி, காணொலி காட்சி அழைப்பு உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி, ரம்யா சரவணன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன், மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ் , மற்றும் கவுண்டர்கள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×