search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா
    X

    பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள், கலெக்டருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.

    தென்காசியில் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா

    • தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-

    ஓயா உழைப்பில் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி எனும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    மேலும் அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும், இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பத்திரிகையாளர்களுக்கும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பரதாலயா, புருஷோத்தமன் நாட்டி யக்குழு, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கலெக்டர் பரிசு, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் சுப்பையா, தென்காசி செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் இளவரசி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×