தேனி அருகே விபத்தில் ஒருவர் பலி

தேனி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா (வயது 51). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அபினேஷ் (வயது 19). என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com