நத்தம் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்து - ஒருவர் பலி

சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நத்தம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது55).இவர் குடும்பத்தினருடன் தனது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு மீண்டும் நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

காரை அவரது மகன் சிவனேசன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. இதில் காரில் வந்த கந்தசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் கந்தசாமியின் உடலை கைபற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த அவரது மனைவி கெஜலட்சுமி, மகன் சிவனேசன், மகள்கள் சுமதி, சித்ரா ஆகியோர் பலத்த காயங்களுடன் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி க்கபட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com