search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
    X

    பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசினார்.

    சீர்காழியில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

    • பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.

    சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.

    Next Story
    ×