என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி சுவற்றில் இருந்த கற்கள் விழுந்து மாணவன் படுகாயம்
- கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே பெருமாம்பாளையம் காலனியைச் சேர்ந்த மாணவன் நாகராஜன்(16). இவர் கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காம்பவுண்டு சுவரின் மேல் இருந்த கற்கள் மாணவன் நாகராஜன் மீது விழுந்துள்ளது. இதில் மாணவன் படுகாயம் அடைந்தான்.
இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






