செந்துறை அருகே அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு

செந்துறையில் அரசு பள்ளிகளில் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மாணவ-மாணவிகளின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார்.
பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.
Published on

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே கரந்தமலை பகுதியில் உள்ள பெரியமலையூர்அரசு நடுநிலைப்பள்ளியிலும், சின்னமலையூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், வலசை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் வாசிப்புத்திறன், கணிதப்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த கல்வியாண்டில் மாணவ-மாணவிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

அவர்களின் தனித்திறனை வளர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின் போது நத்தம் வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, எஸ்தர்ராஜம் மற்றும் பிற ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com