நத்தம் அருகே முதியவர் தற்கொலை

அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்தவர் அடைக்கன் (55). இவர் வீட்டில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அழகர்கோவில் பழமுதிர்சோலை பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அடைக்கன் என்பதும், விஷம் அருந்தி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com