சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  காட்சி.
சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

தருமபுரி,

சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு ரூ.9000 வழங்கவேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கவேண்டும். 6 மாதமாக வழங்காமல் உள்ள மானிய தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மெழுகுவரத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் தேவகி, மாவட்ட பொருளாளர் வளர்மதி மாவட்ட நிர்வாகிகள் ராமன் அனுசுயா, வளர்மதி மஞ்சுளா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் புகழேந்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் கிருஷணமூரத்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com