ஊட்டி மலர் கண்காட்சி இன்று மாலை நிறைவு

மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது
பயணிகள் குவிந்து வருகின்றனர்
பயணிகள் குவிந்து வருகின்றனர்
Published on

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு 124-வது மலர் கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 

மலர் கண்காட்சியை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. அந்த மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. மேலும் மலர் மாடங்களில் 35 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. 

இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மனித உருவங்கள், பொம்மைகள், வேளாண்மை பல்கலைக்க ழக முகப்பு ேதாற்றம் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனை பார்வை யிடுவதற்கா க கடந்த 20-ந் தேதி முதல் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. 

குடும்பத்துடன் அங்கு குவியும் சுற்றுலாபயணிகள் மலர்கள் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். 

முதல் நாளில் 12 ஆயிரம் பேரும், 21-ந் தேதி 19 ஆயிரம் பேரும், 22-ந் தேதி 25 ஆயிரம் பேரும், 23-ந் தேதி 22 ஆயிரம் பேரும் என 4 நாட்களில் 78 ஆயிரம் சுற்றுலாபயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். 

மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் இன்று காலை முதலே சுற்றுலாபயணிகள் கூட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதியது. குடும்பம், குடும்பமாகவும், குழுவாகவும் அங்கு சுற்றுலாபயணிகள் குவிந்துள்ளனர். 

மலர் கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

 விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்குகிறார். கண்காட்சியில் சிறந்த மலர் அரங்கம், தனியார் பூங்கா, வீடு மற்றும் மாடி மலர் தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்படுகிறது. 

சிறந்த பூங்காவுக்கான கவர்னர் கோப்பை, சிறந்த மலருக்கான முதல்-அமைச்சர் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com