கோவையில் முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்

இளம்பெண்ணின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1-ந் தேதி இளம்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணம் நடந்தது.
கோவையில் முன்னாள் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
Published on

கோவை,

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இரண்டு பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடந்த 1-ந் தேதி இளம் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென எனது கணவரை தவிக்க விட்டு முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம் பெண்ணின் கணவர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவர் முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் காதலனுடன் திருமணமான 20-வது நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com