search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நெல்லை நீர் வளம் கருத்தரங்கு
    X

    நெல்லை நீர்வளம் நினைவுத்தொகுப்பு புத்தகத்தை சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட காட்சி. அருகில் கலெக்டர் விஷ்ணு மற்றும் பலர் உள்ளனர்.

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நெல்லை நீர் வளம் கருத்தரங்கு

    • நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    உலக ஆறுகள் தினத்தை யொட்டி நெல்லை மாவட்ட கலெக்டரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு

    பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், நீர்நிலை தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நீர் வளம் நினைவுத் தொகுப்பு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள நீர் நிலைகளின் வழித்தடங்கள் தொடர்பான தண்ணீர் வரைபடம் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    தாமிரபரணி ஆற்று தண்ணீரை குளிக்கும் தரத்தில் இருந்து குடிக்கும் தரத்திற்கு உயர்த்த நெல்லை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் குடிக்கும் தரத்திற்கு தாமிரபரணி ஆற்றின் நீர் மாற்றப்படும்.

    தாமிரபரணி நதியை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி அதனை தரமான முறையில் மாற்றுவதற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும்.

    தாமிரபரணி நீர் சுத்தமாவதன் மூலம் அதனை நம்பியுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் குடிக்கும் தரத்துக்கு மாறிவிடும். அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு நம் நெல்லை மாவட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முடியும். எனவே அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப், தாமிரபரணி நீர் நிலை செயற்பொறியாளர் மாரியப்பன், மற்றும் பழனிச்சாமி, மதிவாணன், வெங்கட்ராமன், சீனிவாசன், அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நீர்நிலை ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×