வேலகவுண்டன்பட்டி அருகேவைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்

கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
வேலகவுண்டன்பட்டி அருகேவைக்கோல் போர்  தீயில் எரிந்து நாசம்
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே நல்ல குமாரன்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வைக்கோல் போர் அவரது வீட்டின் அருகே வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தி, தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பி–னும் ரூ.50 ஆயிரம் மதிப்பி–லான வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமாயின.

X

Maalai Malar
www.maalaimalar.com