தருமபுரி அருகே காதலியுடன் தற்கொலைக்கு முயன்ற மாணவரும் சாவு

தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு எலி பேஸ்ட் தின்று விட்டனர்.சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தருமபுரி அருகே  காதலியுடன் தற்கொலைக்கு  முயன்ற மாணவரும் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம்,ஜிட்டாண்ட அள்ளி அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மகள் சினேகா (வயது.19), இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசுபாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் தமிழரசு ( வயது 18) தருமபுரியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானது,

இந்நிலையில் கடந்த 7-ம் தேதியன்று பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் இருவரும் சந்தித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நாங்கள் இருவரும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம், ஆனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு எலி பேஸ்ட் தின்று விட்டனர்.

செல்போனில் வந்த தகவலை பார்த்து விட்டு 2 பேரின் உறவினர்களும் அலறி அடித்து கொண்டு கோவிலில் சென்று பார்த்த போது 2 பேரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இருவரையும் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com