என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்13 Nov 2023 3:13 PM IST
- 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம்
- பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து நடுவீரப்பட்டு சி.என். பாளையம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஒன்றிய தலைவர் வைத்தி லிங்கம் தலைமையில் தீபாவளி பண்டிகையின் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்காததால் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட தோடு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.மேலும் சம்பளம் வழங்காததால் தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X