என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.
திருவோணம் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- காவாலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உழவாரப் பணி நடைபெற்றது.
திருவோணம்:
திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நாட்டு நல பணி திட்டம் முகாம் நடைபெற்றது இதில் 5வது நாள் பணியாக காவாலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உழவாரப் பணி நடைபெற்றது.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் ஆலத்தூர் தலைமை ஆசிரியர் ஜே.சி.ஐ, கருணாகரன் ஆளுமை பண்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார், விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தம்பிஅய்யன் தலைமை தாங்கினார், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் சிவராஜா, முன்னிலை வகித்தார் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ராமமூர்த்தி விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
Next Story






