search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிதத்துறை தேசிய கருத்தரங்கம்
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணிதத்துறை தேசிய கருத்தரங்கம்

    • வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
    • கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் 'தூய மற்றும் பயன்பாட்டு கணிதம்' என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    கருத்தரங்கில் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை பேராசிரியர் சுரேஷ் சிங், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் வில்சன் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ்சிங், வரைபட கோட்பாடுகள் பற்றியும், அதன் வாழ்நாள் பயன்பாடுகள் குறித்த வரைபடம் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் பேசினார். வில்சன் பாஸ்கர், வரைபடத்தில் தீர்க்கும் தொகுப்புகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களை கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன் அறிமுகம் செய்து வைத்து, வரவேற்று பேசினார். இதில், துறை தலைவர்கள் பாலு, வேலாயுதம், கவிதா, அந்தோணி சகாய சித்ரா, ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் மற்றும் பல்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    இக்கருத்தரங்கில் 12 கல்லூரிகளில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் 42 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை கணிதத்துறை பேராசிரியர்கள் ெசய்திருந்தனர். கருத்தரங்க அமைப்பு ெசயலாளர் சரண்யா நன்றி கூறினார்.

    Next Story
    ×