பரமத்திவேலூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

பரமத்திவேலூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டிபரமத்திவேலூரில் உள்ள சிவன்கோவில்களில்  சாமி, நந்தி சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலித்த காட்சி.
பிரதோஷத்தையொட்டிபரமத்திவேலூரில் உள்ள சிவன்கோவில்களில் சாமி, நந்தி சிறப்பு அலங்காரங்களில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது. 

இதையொட்டி சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மோகனூர் காந்தமலை முருகன் கோவில் எதிரே உள்ள அறிவுரு சித்தர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com