விஷம் தின்ற மூதாட்டி சாவு

ஜோடர்பாளையம் அருகே விஷம் சாப்பிட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி (வயது 80). கூலித்தொழிலாளி. 

இவருக்கு கை மற்றும் கால் பகுதிகளில் மூட்டு வலி தொடர்ந்து இருந்து வந்துள்ளது. வலியின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இருப்பினும் மூட்டு வலி சரியாகததால் அவதிப்பட்டு வந்தார்.  இந்த நிலையில் விரக்தியில் இருந்த கருப்பாயி கடந்த 7-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலியை கொல்ல பயன்படுத்தப்படும் விஷத்தை சாப்பிட்டுள்ளார். 

இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com