அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பார்வையிடும் பெண்கள்.
கண்காட்சியை பார்வையிடும் பெண்கள்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீசாணத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. 

இதில் கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு உள்பட பல்வேறு நிகழ்விகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

 நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி,

 ஏழை பெண்களுக்கு திருமண நிதிஉதவியுடன் தங்கம் வழங்கிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com