

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறையில் புதிதாக எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி புனித தீர்த்தக்குடங்களுடன் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
19-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, யாக வேள்வி, மகா தீபாராதனை மற்றும் கோபுர கலசங்கள் வைத்து மருந்துகள் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
20-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் லட்சுமி நாராயணப் பெருமாள், ஆதிதுர்க்கையம்மன், சிவசங்கரேஸ்வரன், காமாட்சி அம்மன், சமயபுரத்து மாரியம்மன், பாலதண்டாயுதபாணி, ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை லட்சுமி நாராயணயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.