அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையவழியில் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையவழியில் தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
.
.
Published on

நாமக்கல்:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்து தொழிலாளர்களின் குழந்தைகளின் 2020-2021-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை இணையவழியில் விண்ணப்பிக்க, பதிவினை புதுப்பித்தலுக்கான காலநீட்டிப்பு கடந்த 31-12-2021 அன்றுடன் முடிவுற்றது. 

எனவே 1-1-2022 முதல் புதுப்பித்தல் நடப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்க இயலும். மேலும் கல்வி பயிலும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு 2021-2022-ம் கல்வியாண்டிற்கு மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்று புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்களில் இணையவழியில் தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்யாத தொழிலாளர்கள் அனைவரும் தங்களுடைய நலவாரிய அட்டையுடன் தங்களது ஆதார் எண், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

பதிவேற்றம் செய்த தொழிலாளர்கள் மட்டுமே உடனடியாக நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்க இயலும். எனவே நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்புமனுக்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தல் ஆகியவைகளை மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவு செய்ய அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அருகில் உள்ள கணினி மையம், இ-சேவை மையம், சி.எஸ்.சி. கணினி மையங்களை அணுகுமாறு  மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com