மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசிபாளைத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (65).விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் மோகனூர்  வளையப்பட்டி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். 

செவிட்டுரங்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த கார் பழனியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்பழனியப்பன் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரதுமகன் சபரி மோகனூர்போலீசில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com