நாமக்கல் நகராட்சிக்கு வாக்கு எந்திரங்கள் ஒதுக்கீடு

நாமக்கல் நகராட்சியில் உள்ள 37 வார்டுகளுக்கும் வாக்கு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
.
.
Published on

நாமக்கல்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன.  வேட்பு மனுத் தாக்கலின் போது 22, 25 ஆகிய வார்டுகளில் சுயேச்சைகள் இருவரை தவிர யாரும் போட்டியிடாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 37 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள 109 வாக்குச் சாவடிகளுக்கான 200&க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி, நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் கி.மு.சுதா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி வேட்பா ளர்கள், சுயேச்சைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com