பேனர்கள் அகற்றபட்டதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு

பேனர்கள் அகற்றபட்டதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
,
,
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, எடப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் கடை திறப்பு விழா, கல்வி நிறுவனங்கள் விளம்பரம், கோவில் கும்பாபிஷேக விழா, ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட அதிக  பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  

முன்னாள் அமைச்சர் தங்கமணி மாவட்ட செயலராக தேர்வு செய்யப்பட்டத்திற்கும், குமாரபாளையம் அ.தி.மு.க. நகர செயலராக பாலசுப்ரமணி தேர்வு செய்யப்பட்டமைக்கும், அனைத்து வார்டுகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, நகராட்சி கமிஷனர் வழிகாட்டுதல்படி, நகராட்சி நகரமைப்பு அலுவலர் இயற்கை பிரியன் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பேனர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  அ.தி.மு.க.வினர் வைத்த பேனர்கள் அகற்ற நகர செயலர் பாலசுப்ரமணி மற்றும் நிர்வாகிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் போலீசாரிடம் தாங்களாகவே அகற்றிகொள்கிறோம் என அ.தி.மு.க.வினர் கூறியதால், சமரசம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com