search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடி பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
    X

    போலீசார் குழுவினர் ரவுடிகள் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    ரவுடி பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

    • குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஆய்வு

    இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருந்தி வாழ அறிவுரை

    அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.

    அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×