பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பரமத்திவேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதருக்கு தாரா பாத்திரம் மூலம் தொடந்து நீர் சொரியும் அலங்காரமும் செய்யப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பரமத்திவேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதருக்கு தாரா பாத்திரம் மூலம் தொடந்து நீர் சொரியும் அலங்காரமும் செய்யப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோ ஷத்தினை முன்னிட்டும், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியினை முன்னிட்டும் ஏகாம்பரநாதருக்கு தாரா பாத்திரம் (சல்லடையின்) மூலம் தொடந்து நீர் சொரியும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வ தீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்க ளில் உள்ள சிவபெரு மானுக்கு வளர்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிரதோஷ விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com