search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேக விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் யாக சாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கோவில் அருகில் யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    யாக சாைல பூஜை

    இன்று மாலை யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடங்கப்படுகிறது.

    கும்ப பூஜை (கலசபூஜை) திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச்செய்தல், ஐப்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல் ஆகியவை நடக்கிறது. பின்னர் அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய ப்ரபந்த சமர்ப்பணம், செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்

    நாளை (31-ந்தேதி) காலை 8 மணி முதல் 12. 30 மணிக்குள் வருண தீர்த்தம் புனித படுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின ெபருவிழா மற்றும் அஷ்ட பந்தன மருத்து சாற்றுதல் நடக்கிறது.

    தொடர்ந்து பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல் ஆகியவை நடக்கிறது.

    கும்பாபிேஷகம்

    நாளை மறுநாள் (1-ந்தேதி) காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் ஆகியவை நடக்கிறது. பின்னர் காலை 10 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகமே மின்ஒளியில் ஜொலிக்கிறது. மேலும் கோவிலில் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ேபாடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாமக்கல் நகரமே திருவிழா போல் களை கட்டியுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம். எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை செல்வா, சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி ஆணையாளர் இளையராஜா, கண்காணிப்பாளர் அம்சா உள்ளிட்டோர் செய்து வருகின்றன.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    Next Story
    ×