பரமத்திவேலூர் அருகேகார் மோதி கூலி தொழிலாளி பலி

நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது.இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்திவேலூர் அருகேகார் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலிதொழிலாளி.

விபத்தில் பலி

இவர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பரமத்திவேலூர்- நாமக்கல் செல்லும் சாலையை கடந்த போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேக மாக வந்த கார் பழனி மீது மோதியது. இதில் பழனிக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனி பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் ஓட்டம்

விபத்து ஏற்பட்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து காரை பறிமுதல் செய்து டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com