பரமத்திவேலூர் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).

தற்கொலை

இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.

வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com