செட்டியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா

நாமக்கல் செட்டியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
.
.
Published on

விமலா கிறிஸ்டி வரவேற்று பேசினார். நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டிகள், அறிவியல் விழிப்புணர்வு நாடகம், ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி ஆசிரியை லதா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com