மோகனூர் அருகே செங்கல்சூளை தொழிலாளி மீது தாக்குதல்

மோகனூர் அருகே செங்கல்சூளை தொழிலாளியை தாக்கியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குன்னிப்பாளையம் மதுரை வீரன் கோவில் அருகே குடியிருந்து வருபவர் ராமச்சந்திரன் (40).இவரது மனைவி வசந்தா (35). இவர்கள் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமானசெங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் வசந்தா தனது கணவர் ராமச்சந்திரன் மற்றும் இளையமகன் சுதாகர் ஆகியோருடன் வீட்டுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் தண்டாம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சக்திவேல் என்பவர் திடீரென வீட்டுக்குள் புகுந்து ராமச்சந்திரன், வசந்தா மற்றும் அவரது இளைய மகன் ஆகியோரை திடீரென தாக்கினார். 

இதுகுறித்து வசந்தா மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி வேலை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com