செல்லமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கீழ்வேளூர் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூர் அடுத்த இருக்கை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த  ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில்  பங்குனி தீமிதி திருவிழா கடந்த 13-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

 திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  

ஒருவர் பின்  ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர்  சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com