நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கூட்டம்

திருமருகலில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கூட்டம் நடைபெற்றது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com