உலக நன்மைவேண்டி ஹோமம்

திருப்பூண்டி அருகே உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
சிறப்பு ஹோமம் நடந்தது.
சிறப்பு ஹோமம் நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு மகாேஹாமம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

யாகத்தில் உலக நன்மை வேண்டியும், உலக அமைதிகாகவும், விவசாயம் செழிக்கவும் போதிய மழை பொழிய ஹோமம் நடைபெற்றது. 

பெரிய யாக குண்டம் அமைத்து 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு மஹா யாகம் நடைபெற்றது. நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது. 

பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com