என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே முரம்மன்குளம் நிரம்பியது
- ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பட்டி, ஐரவன்பட்டி, பரிவள்ளி கோட்டை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
இந்த மழை நீர் ஓடையின் வழியாக வந்து ஒட்டநத்தம் குளம் நிரம்பியது. ஒட்டநத்தம் குளத்தின் மறுகால் நீர் கொம்பாடி ஓடை வழியாக முரம்மன் குளத்திற்கு வந்து அந்த குளமும் நிரம்பி மறுகால் சென்றது. இக்குளம் நிரம்பியதால் இந்த பகுதி நிலத்தடி நீர் பெருகும். இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள் நிரம்பி வழியும். இப்பகுதி கிணற்று பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள மானாவாரி விவசாயிகள் மழைக்கு முன்பாக உளுந்து, பாசிப்பயறு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். தற்சமயம் பெய்த மழையால் பயிர்கள் நன்றாக முளைத்துள்ளன. இதனால் இப்பகுதி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






