search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர்  நகராட்சி சாதாரண கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    கடையநல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம்

    • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, கமிஷனர் சுகந்தி, பொறியாளர் அப்துல்காதர், உதவி பொறியாளர் கண் ணன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், மேலாளர் சண்முக வேல், கணக்கர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.

    குடிநீா விநியோகம்

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதி பாலீஸ்வரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், தன லெட்சுமி, பாலசுப்பிர மணியன், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகைதீன் கனி, மீராள்பீவி, திவான்மைதீன், யாசர்கான், வேல்சங்கரி, சங்கர நாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், அக்பர்அலி, பீரம்மாள், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராம கிருஷ்ணன், மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், சண்முக சுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, செய்யதலி பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் விநியோகத்தின் அளவு வறட்சி காலங்களில் உள்ளூர் குடிநீர் திட்ட ஆதாரத்தில் நீரின் அளவு குறைய பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது.

    10 வார்டுகள்

    மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அளவு குறைவாக வரப்பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது. தாமிரபரணி குடிநீரானது 10 வார்டு மக்களுக்கு மட்டும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தேவைப்படும் குடிநீரின் அளவிற்கு ஏற்ப தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் மூலமாகவோ அல்லது கூட்டு குடிநீர் திட்டத்தின் கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கு புதியதாக குடிநீர் திட்டத்தை செயல்ப டுத்தி தர அரசிடம் கோருவது உள்பட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    கூட்டத்தின் போது நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறக்கி சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞா னிகள் மற்றும் குழுவின் தலைவர் வீரமுத்துவேலுக்கு அனைவரும் எழுந்து நின்று நன்றி, பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×