முள்ளக்காடு வடபத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

கோவில் கோபுரம், விமானம் மற்றும் பத்ரகாளிஅம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் விழா நடைபெற்றதுதீபாராதனைக்குப் பின் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட காட்சி.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடபத்ரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கடந்த 7-ந் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கி ஒன்றாம் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகளுக்கு பின், வேதிகா அர்ச்சனை, சங்கர நாம பாராயணம், ஹோமங்கள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் தீபாராதனை கும்பம் எழுந்தருளல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கோவில் கோபுரம், விமானம் மற்றும் பத்ரகாளிஅம்மனுக்கு புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடத்த பட்டு தீபாராதனைக்குப் பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி களை ஸ்பிக் நகர் சிவஸ்ரீ சதாசிவ பட்டர் நடத்தினார்.

ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் சொக்கலிங்கம், செயலாளரும் தர்மகர்த்தா வுமான சேகர் என்ற சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், உச்சினி மாகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சின்னராஜ், முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல், துணைத்தலைவர் ராஜ்குமார் மற்றும் கோவில் வரி தாரர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com