search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் அருகே பாளையங்கால்வாயில் மண் கொட்டி சாலை விரிவாக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து நத்தம் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    மேலப்பாளையம் அருகே பாளையங்கால்வாயில் மண் கொட்டி சாலை விரிவாக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

    • நெல்லை மாநகரில் பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் வந்து விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாளையங்கால்வாயில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் இருந்து நத்தம் வரையிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் வந்து விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விரிவாக்கம் செய்யும் பணி

    தற்போது பாளையங்கால்வாயில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் இருந்து நத்தம் வரையிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

    மும்முரமாக நடைபெற்று வரும் இந்த பணியில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக பாளையங்கால்வாய் ஓரத்தில் மண் கொட்டப்பட்டு அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    புகார்

    மறுபுறத்தில் சாலையை அகலப்படுத்தாமல், பாளையங்கால் வாயில் மண்ணை கொட்டி அகலப்படுத்துவதால் கால்வாயின் அகலம் குறைவதோடு தண்ணீர் செல்லும் நீர் வழி பாதையும் சுருங்குகிறது என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜபார் கூறியதாவது:-

    ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் கலெக்டர் அலுவலகம் எதிரே பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அமைத்து வருகிறார்கள்.

    கடந்த காலங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி இடிக்கப்பட்ட நிலையில் தற்போது பொழுதுபோக்கு பூங்கா கட்டப்பட்டு வருகிறது.இதனால் தாமிரபரணி நதி அகலம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான் குளத்திலும் மண் கொட்டப்பட்டு படகு குளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாளை யங்கால்வாயில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மண் கொட்டப்பட்டுள்ளது. இதனை எங்களது கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சாலை விரிவாக்கம் செய்வதற்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

    Next Story
    ×