என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடபழனியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
- வீட்டின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து தப்பி இருப்பது தெரிந்தது.
போரூர்:
கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 7-வது தெருவில் 3வது தளத்தில் வசித்து வருபவர் அஜய்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். எனினும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. அருகே தீக்குச்சிகள் கிடந்தன. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து தப்பி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






