என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கம்பத்தில் பூட்டி இருந்த வீட்டில் பணம், பொருட்கள் கொள்ளை
- கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று உறவினர் வீட்டு விசேஷத்துக்காக சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன. இது குறித்து கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் நகரில் போதை ஆசாமிகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று இரவு வியாபாரி போதை வாலிபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கம்பம் நகரில் வீட்டில் கொள்ளை நடந்தது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. எனவே போலீசார் இரவு ேநர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பழைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன் போதை வாலிபர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






