search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்படும் குறுங்காடுகள்
    X

    திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி குறுங்காடு.

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்படும் குறுங்காடுகள்

    • தமிழகத்தின் தற்போதைய வனப்பரப்பு 22.71 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டிமாவனம் சார்பில் 2 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    உலகின் பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்து உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்தன.

    இதுபோன்று பல்வேறு நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து கார்பன் வெளியேற்றத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக மரங்களை நட்டு மழை வளத்தை பெருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தின் தற்போதைய வனப்பரப்பு 22.71 சதவீதமாக உள்ளது. இதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10 ஆயிரம் குறுங்காடுகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து சுற்றுச்சூ ழல்துைற அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் அனைத்து மாவட்டங்க ளிலும் மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திண்டிமாவனம் சார்பில் 2 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி வளாகத்தில் ஒரு குறுங்காடும், பொன்மாந்துறை பகுதியில் ஒரு குறுங்காடும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பில் தமிழகத்திலயே திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

    தற்போது மழைக்காலம் என்பதால் மரக்கன்றுகளை அடர்த்தியாக நடவு செய்தால் பராமரிப்பு இல்லாமலேயே வெகுவாக வளர்ச்சி அடையும். இதில் நெட்டையாக வளரும் மரங்கள், குட்டையாக வளரும் மரங்கள், பயன்தரும் மரங்கள் என அனைத்தையும் கலந்து நடவேண்டும். இதன் மூலம் பசுமை வளம் பாதுகாக்கப்படுதுடன் இயற்கை சூழலுக்கும் ஏற்றதாக அமையும்.

    பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த குறுங்காடுகள் மிகவும் உதவியாக உள்ளது. நகர்புறங்களில் ஏற்படும் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிசன்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இந்த குறுங்காடுகள் திகழ்கின்றன. இதுேபான்ற குறுங்காடுகள் அமைக்கும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×