search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகள் - அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்
    X

    ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் இ.பெரியசாமி வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    திண்டுக்கல் அருகே 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகள் - அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்

    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கலந்து கொண்டு கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி, ரெட்டியார்ச த்திரம் ஊராட்சி ஒன்றிய ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்று ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 200 கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கும், ரெட்டி யார்சத்திரம் வட்டாரத்தை சார்ந்த 200 கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் என மொத்தம் 400 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி பேசியதாவது:-

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி போன்றதாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆதிகாலத்தில் கட்டிசோறு கட்டி கொண்டு செல்லும் விழா நமது பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    அதுபோலவே, இந்த சமுதாய வளைகாப்பு விழா ஏழை, எளிய கர்ப்பிணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக தமிழக அரசின் சார்பில் நடைபெறுகிறது. இது நமது குடும்ப பிள்ளைகள் பங்கேற்றுள்ள சிறப்பான நிகழ்ச்சியாகும். கர்ப்பிணித்தாய்மார்கள் நீண்ட ஆயிலோடு, மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

    இவ்விழாவில் டாக்டர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நல்ல முறையில் குழந்தை களை பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த உயிரோட்டமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகி றேன் என பேசினார்.

    ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சுகாதாரத்துறையின் சார்பில் 4 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்ட ச்சத்து பெட்டகத்தினை இ.பெரியசாமி வழங்கினார்.

    Next Story
    ×