search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவநேரியில் தூண்டில் வளைவு தேவை- புயல் பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் கோரிக்கை
    X

    புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    தேவநேரியில் தூண்டில் வளைவு தேவை- புயல் பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவர்கள் கோரிக்கை

    • மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது.
    • பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே கரையை கடந்த "மாண்டஸ்" புயலானது மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி, தேவநேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம் மீனவர் கிராமங்களை தாக்கியது. இதில் கடற்கரை ஓரத்தில் உள்ள கோயில், தார் சாலைகள், படகுகள் சேதமடைந்தது. சில பகுதிகளில் வலைகளும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

    இப்பகுதி பாதிப்புகளை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் தலைவர் கௌதமன், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, சதீஷ்குமார், மோகன்குமார், தேசிங்கு, இ.சி.ஆர் அன்பு, ஐயப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது துண்டில் வளைவு அமைகக் வேண்டும் என அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவர் கிராமம் சேதங்களை ஆய்வு செய்து, கணக்கிட்டு அதன் விபரங்களை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும். இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மதிய உணவு வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×