விழுப்புரம் அருகே மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது: டிரைவர் உள்பட 3 பேர் காயம்

கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. . இந்த மினி லாரி இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
விழுப்புரம் அருகே  மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது: டிரைவர் உள்பட 3 பேர் காயம்
Published on

விழுப்புரம்:

கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. இதனை டிரைவர் ரவி (20) ஓட்டி வந்தார். அவருடன் வடிவேல் (23), துமேஷ் (24) ஆகியோர் வந்தனர். இந்த மினி லாரி இன்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள அரசூர் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதை கேட்ட இருவேல் பட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசார் உதவியுடன் விபத்தில் சிக்கிய துமேசை மீட்டனர். பின்பு 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com