மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எரித்த உரிமையாளர்

ஸ்கூட்டரை வாங்கும்போது ஓலா நிறுவனம் 180 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று கூறியதாகவும், தற்போது 50 கிலோ மீட்டர்கூட தரவில்லை என்றும் உரிமையாளர் புகார் கூறி உள்ளார்.
தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே மைலேஜ் சரிவர கொடுக்காததால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் பெட்ரோல் ஏற்றி எரித்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சாமியார்மடத்தைச் சேர்ந்தவர் பிருத்விராஜ். பிசியோதெரபி மருத்துவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி உள்ளார். வாகனத்தை வாங்கிய நாள் முதல் 4 முறைக்குமேல் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆம்பூர் நோக்கி சென்றபோது, சார்ஜ் இல்லாமல் ஸ்கூட்டர் நின்றதாகவும் கூறப்படுகிறது. ஸ்கூட்டரை வாங்கும்போது ஓலா நிறுவனம் 180 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று கூறியதாகவும், தற்போது 50 கிலோ மீட்டர்கூட தரவில்லை என்றும் ஆத்திரமடைந்த அவர், ஸ்கூட்டர் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார். 

சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிவதும், பேட்டரி பிரச்சனைகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com