மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தற்போது நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொருத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அமைகிறது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று விநாடிக்கு 1,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,410 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று 103.23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.20 அடியாக சரிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com