தென்காசியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

நிகழ்ச்சியை சிவந்திநகர் காந்தமதி ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார். குத்துக்கல்வலசை ரவுண்டானா முதல் தென்காசி ஹவுசிங் போர்டு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று லூர்து நாடார் பேசினார்.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

தென்காசி:

தென்காசியில் உள்ள சிவந்திநகரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியை சிவந்திநகர் காந்தமதி ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பிப்போம். மேலும் தமிழக அரசு தென்காசி குத்துக்கல்வலசை ரவுண்டானாவில் இருந்து ஹவுசிங்போர்டு வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்பொழுது காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாக காணப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் குற்றாலம் சீசன் தொடங்க இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடுதலாக தென்காசிக்கு வந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் இன்னும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிகமான சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் குத்துக்கல்வலசை ரவுண்டானா முதல் தென்காசி ஹவுசிங் போர்டு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில மாநில பொருளாளர் சுப்பிரமணியன், இசக்கிமுத்து நாடார், காந்திமதி ஜெயச்சந்திரன் கணேசன், சிவந்திநகர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com