மேச்சேரி எறகுண்டப்பட்டி ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்த காட்சி.
விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்த காட்சி.
Published on

சேலம்:

மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாட்டியாலயாவின் பாரத நடன நிகழ்ச்சியும், 10 மணி முதல் பஜனையும் நடைபெற்றது.

இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருமஞ்சனம் நீராட்டல் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 4.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்பு 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சுகுமார்-வனிதா மணியம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் அறக்கட்டளைதாரர் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com