search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கீழவாசல் அண்ணா வணிக வளாகத்தில் மேயர் ஆய்வு
    X

    அண்ணா வணிக வளாகத்தை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சை கீழவாசல் அண்ணா வணிக வளாகத்தில் மேயர் ஆய்வு

    • அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
    • கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் இன்று அண்ணா வணிக வளாகத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    அண்ணா வணிக வளாகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இங்கு கீழ் தளம் ,மேல் தளம் உள்ளது. தலா 9432 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளம், மேல் தளம் அமைந்துள்ளன. கீழ்தளத்தில் 17 கடைகளும், மேல் தளத்தில் 26 கடைகளும் உள்ளது.

    இந்த கடைகள் அனைத்தும் விரைவில் ஏலம் விடப்படுகின்றன.

    இதைத் தவிர கழிப்பறை வசதிகள், சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் அஞ்சுகம்பூபதி, உதவி பொறியாளர் ஆனந்தி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×